உயர்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்
11 Feb 2026, 5:52 pm
<p><strong>உயர்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்</strong></p>
<p>அறந்தாங்கி, பிப்.11 - ‘உலகம் உங்கள் கையில்’ என்னும் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறி வியல் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை புதன்கிழமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கலைஞர் கல்லூரி முதல்வர் கே.நிர்மலா, வட்டாட்சியர் மு. செந்தில்நாயகி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அறந்தாங்கியை அடுத்த ராஜேந்திர புரம் நைனா முகமது மகளிர் கலை அறி வியல் கல்லூரியில் தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் நை.முகமது பாரூக் தலைமை வகித்து உரையாற்றினார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மற்றும் பாரதிதாசன் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திருச்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் 92 மாணவிகளுக்கு தமி ழக அரசின் மடிக்கணினியை வழங்கி உரையாற்றினார். மேற்பனைக்காடு அப்துல் பாரி, கிரசன்ட் பள்ளியின் முதல்வர் அசாருதீன், கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் இருபால் பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அலுவலக பணி யாளர்கள் கலந்து கொண்டனர். முன்ன தாக வணிக மற்றும் வணிக நிர்வாகவி யல் துறை தலைவர் புவியரசு வரவேற்றார். கணினி அறிவியல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் மாணவர் களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந் தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) உமாதேவி தலைமை வகித்தார். அமைப்பியல் துறை விரிவுரையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் பங்கேற்று 418 மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கினார். இதில் உடற் கல்வி இயக்குநர் சுவாமிநாதன், அமைப்பியல் துறை விரிவுரையாளர் ஷீலா உட்பட விரிவு ரையாளர்கள்,மாணவர்கள் பங்கேற்ற னர். மின்னணுவியல் மற்றும் தொடர்பி யல் துறை விரிவுரையாளர் அனிதா நன்றி கூறினார்.</p>
