மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
1 Jan 2026, 4:52 pm
<p><strong>மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்</strong></p>
<p>பெரம்பலூர், ஜன.1 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாற்றுத் திறனுடைய சிறப்பு குழந்தைகளுக்கு ரூ.5.94 லட்சத்தில் உதவி உபகரணங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ந.மிரு ணாளினி புதன்கிழமை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம், சுகாதாரத் துறை, மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம் களில் மாற்றுத் திறனுடைய சிறப்பு குழந் தைகளை கண்டறிந்து, அக்குழந்தை களுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்களுக்கான அளவீடு (Measurement) மற்றும் கற்றல் - கற்பித் தல் உபகரணங்கள் குறித்த தேவைப் பட்டி யல் தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில், அறிவுசார் குறை பாடுடைய 70 குழந்தைகளுக்கு கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் (TLM Kit) மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி (CP Chair), சக்கர நாற்காலிகள் (Wheelchair Child) என ரூ.5.94 லட்சம் மதிப்பிலான உப கரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் இலவசமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.</p>
<p> </p>
