கீழாண்மறைநாட்டில் பெண்களுக்கான கழிப்பறை வசதியை ஏற்படுத்துக! மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>கீழாண்மறைநாட்டில் பெண்களுக்கான கழிப்பறை வசதியை ஏற்படுத்துக! மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>வெம்பக்கோட்டை, நவ.14- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு ஊராட்சி க்கு உட்பட்டது அருந்ததி யர் காலனி. இங்கு, இடிக் கப்பட்ட சமுதாயக்கூடத்தை புதுப்பிக்க வேண்டும். சமத்துவபுரத்தில் உள்ள குடி யிருப்புகளுக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்புகள் வழங்க வேண்டும். இந்திரா நகர்-இராமுத் தேவன் பட்டி சாலையில் உள்ள கால்வாயில் தண்ணீர் தடையில்லாமல் சென்றிட நடவடிக்கை எடுக்க வேண் டும். மகளிருக்கான சுகா தார வளாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராம மூர்த்தி தலைமையேற்றார். மூத்த தோழர் காளிமுத்து முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றிய செயலாளர் கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர்கள் சேகர், ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், ஊராட்சி செயலர் முருகனி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>
