தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிக்காமலையில் ரேசன் கடை, மின் வசதி செய்து தருக! வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிபிஎம் மனு

9 Nov 2025, 2:37 pm
அடிக்காமலையில் ரேசன் கடை,  மின் வசதி செய்து தருக! வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிபிஎம் மனு
<p><strong>அடிக்காமலையில் ரேசன் கடை, &nbsp;மின் வசதி செய்து தருக! வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிபிஎம் மனு&nbsp;</strong></p> <p>அரியலூர், நவ.9- தா.பழூர் ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட அடிக்காமலை கிராமத்தில் இருந்து பெண் ஒருவர், தனது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார். &nbsp;அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட அடிக்காமலை கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மனைவி ரமா, தனது கிராமத்தில் 185 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும், இவர்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று வாழைக்குறிச்சி கிராமத்திற்குச் சென்று ரேசன் அரிசி வாங்கும் நிலை உள்ளது. &nbsp;அதேபோல், சுடுகாடு செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளதால் தார்ச் சாலை அமைத்து தரவும், அப்பகுதியில் தெருவில் மின்சார வசதி இல்லாமலும், தெரு மின்விளக்குகள் இல்லாமலும் மின்சார வசதியும், மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை போர்கால அடிப்படையில் செய்து தரக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு எழுதியிருந்தார். &nbsp;அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா, தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று மேலாளர் செல்வியிடம் புகார் மனு அளித்தனர். &nbsp;இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாஜலம், ஏ.கந்தசாமி, வி.பரமசிவம், துரை.அருணன், கே.கிருஷ்ணன், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுனன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ. அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சாமிதுரை, ஆண்டிமடம் வட்டச் செயலாளர் எம். வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.