தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பஞ்சமி நிலத்தை வீடு இல்லாத தலித் மக்களுக்கு வீட்டு மனையாக வழங்குக! சிபிஎம்–தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு கொடுக்கும் போராட்டம்

3 Mar 2026, 3:38 pm
பஞ்சமி நிலத்தை வீடு இல்லாத  தலித் மக்களுக்கு வீட்டு மனையாக வழங்குக! சிபிஎம்–தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு கொடுக்கும் போராட்டம்
<p><strong>பஞ்சமி நிலத்தை வீடு இல்லாத &nbsp;தலித் மக்களுக்கு வீட்டு மனையாக வழங்குக! சிபிஎம்&ndash;தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு கொடுக்கும் போராட்டம்</strong></p> <p>தேனி, மார்ச் 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அரசு கைவசம் உள்ள பஞ் சமி நிலத்தை வீடு இல்லாத ஏழை தலித் மக்களுக்கு வீட்டு மனையாக வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் அருகே, கோம்பை பகுதி யில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமி நிலம் (சர்வே &nbsp;எண் 888/1, 2, 3) வீடு இல் &nbsp;லாத பட்டியலின மக்களுக்கு &nbsp;பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உத்தம பாளையம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;ஏரியா செயலாளர் டி.கே. சீனி வாசன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் &nbsp;சுருளிவேல் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு சிறப் புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் &nbsp;செயலாளர் ஜி.எம்.நாக ராஜன், மாவட்ட நிர்வாகிகள் &nbsp;செல்வம், மீனா, விவசாயி கள் சங்க ஏரியா செயலாளர் எஸ்.லட்சுமணன், வாலிபர் &nbsp;சங்க மாவட்டத் தலைவர் விக் &nbsp;னேசுவரன், மாதர் சங்கத் தலைவர் வேளாங்கண்ணி மற்றும் சிபிஎம் ஏரியா குழு உறுப்பினர்கள் ஆனந்தன், &nbsp;அம்சராஜ், ஆண்டவர், காளி ராஜ், ஜெகதீஸ்வரன் உள் &nbsp;ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.