தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்கிடுக! பால் உற்பத்தியாளர் சங்க மதுரை மாநாடு கோரிக்கை

26 Dec 2025, 4:32 pm
சத்துணவுத் திட்டத்தில்  பால் வழங்கிடுக! பால் உற்பத்தியாளர் சங்க மதுரை மாநாடு கோரிக்கை
<p><strong>சத்துணவுத் திட்டத்தில் &nbsp;பால் வழங்கிடுக! பால் உற்பத்தியாளர் சங்க மதுரை மாநாடு கோரிக்கை</strong></p> <p>மதுரை, டிச.26- தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட 5 ஆவது மாநாடு கருமாத்தூரில் நடைபெற்றது. &nbsp;சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி அவர்களின் நினைவு ஜோதியினை தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செய லாளர் &nbsp;கே. ராஜேந்திரன் எடுத்துக் கொடுக்க பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் &nbsp;ஏ.சி. வெண்மணி சந்திரன் பெற்றுக் கொண்டார். &nbsp;மாநாட்டில் நினைவுஜோதி ஏற்றப்பட்டது. &nbsp;மாவட்டத் தலைவர் ஏ.சி. வெண்மணி சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.இளங்கோவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் &nbsp;த. செல்லக்கண்ணு, பால் சங்கத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட நிர்வாகி மகேந்திரன், ஸ்டாலின் குமார், ஜோதி பாசு, தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பெரிய கருப்பன், மாவட்ட பொருளாளர் கே.இன்பராஜ் . கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரன். பழையூர் கனகவேல் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். &nbsp;மாநிலப் பொதுச் செயலா ளர் பி. பெருமாள் நிறைவுரை யாற்றினார். விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பி னர் வி.பி.முருகன், குருசாமி ஆகியோர் நன்றி கூறினர். &nbsp;நிர்வாகிகள் தேர்வு &nbsp; மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவராக பி. மகேந்திரன், மாவட்டச் செய லாளராக ஏ.சி. வெண்மணி சந்திரன், மாவட்ட பொரு ளாளராக எஸ். தங்கமாயன் ஆகியோர் உட்பட 30 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் &nbsp; லிட்டருக்கு பத்து ரூபாய் விலை உயர்த்திக் கொடுக்க வேண்டும். &nbsp;50 சதவீத மானி யத்தில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும். கால் நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதம் ஆவின் ஒன்றிய நிர்வாகமே வழங்க வேண்டும். &nbsp;குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பாலையும் வழங்க வேண்டும். மதுரை ஆவினின் லாபத்தில் பொங் கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.