பணியிடங்களில் பெண்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்குக!
9 Mar 2026, 4:24 pm
<p><strong>பணியிடங்களில் பெண்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்குக!</strong></p>
<p>எட்டயபுரம், மார்ச் 9 - சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில அளவிலான பெண்ணாசிரி யர்கள் சிறப்பு மாநாடு தூத்துக் குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பெண்ணா சிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு சங்கத்தின் மாநி லத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் தா.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் தே. முருகன், எஸ்டிஎப்ஐ அகில இந்தி யப் பொதுக்குழு உறுப்பினர் ச. டேவிட்ராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநாட்டை மாநில துணைத் தலைவர்கள் சி.ஜி.பிரசன்னா, ஏ.கிருஷ்ணவேணி, சே.பேச்சியம் மாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். வர வேற்புக் குழுத் தலைவரும் தமிழ் பாப்திஸ்து பள்ளிகளின் தலை வருமான மா.லால் பகதூர் கென்னடி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் ச.மயில் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 ஆவது பட்டம் சந்த்ர சைதன்யராஜா வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டின் முதல் அமர்வில் “அறிவே அழகு” என்ற தலைப் பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம் கருத்துரை வழங்கினார். இரண்டாம் அமர்வில் “சமூகத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்க தென்மண்டல இணை அமைப்பாளர் ஆர்.எஸ்.செண்ப கம் பேசினார். மூன்றாவது அமர்வில் “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் களப் பிரன் உரையாற்றினார். பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அர சாணை எண்.243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கும் மாணவி களுக்கும் போதுமான கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்முறைகளில் ஈடு படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே சாதிய வன்முறைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யிக்க வேண்டும். போதைப் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ்டிஎப்ஐ அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் கு.சுதா நன்றி தெரிவித்தார்.</p>
<p> </p>
