முந்தய பக்கம்

இடஒதுக்கீடு மூலம் அரசு வேலை வழங்கிடுக

7 Dec 2025, 3:52 pm
இடஒதுக்கீடு மூலம் அரசு வேலை வழங்கிடுக
<p><strong>இடஒதுக்கீடு மூலம் அரசு வேலை வழங்கிடுக&nbsp;மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p> <p>கோவை, டிச.7- இடஒதுக்கீடு மூலம் அரசு வேலை &nbsp;வழங்க வேண்டும் என மாற்றுத்திற னாளிகள் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் &nbsp;கோவை மாவட்டப்பேரவை, பொள் ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் &nbsp;சங்க கட்டிடத்தில் தோழர் மஞ்சை சி. மகாலிங்கம் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அமைப்புக்குழு உறுப் பினர் பி.ஜோதிகுமார் தலைமை வகித்தார். எம்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வி.விஜயராகவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன் சிறப்புரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. மகாலிங்கம் வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி கள் நலவாரிய (UDID) அடையாள &nbsp;அட்டை எளிதாக கிடைக்க வழிவகை &nbsp;செய்ய வேண்டும். ஆந்திரா மாநிலத் தை போன்று, தமிழகத்திலும் மாற் றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண் டும். உயரம் தடைபட்டோரை கடும் &nbsp;ஊனமாக அறிவிக்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு &nbsp;தங்கும் விடுதி அமைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும். பேருந்துகளில் தாழ்த் தள படிக்கட்டுகள் அமைத்திட &nbsp;வேண்டும். மாற்றுத்திறனாளிக ளுக்கு ஒதுக்கியுள்ள இட ஒதுக் கீட்டை பயன்படுத்தி அரசு வேலை களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து 13 பேர் கொண்ட &nbsp;மாவட்ட அமைப்புக்குழு தேர்வு செய் யப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக கே.மகாலிங்கம் தேர்வு செய்யப்பட் டார். அமைப்புக்குழு உறுப்பினர் டி. இளையராஜா நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram