தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘வங்கி ஓய்வூதியர்களுக்கு நிதி சார்ந்த நீதி வழங்குக’ ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

25 Jan 2026, 4:16 pm
‘வங்கி ஓய்வூதியர்களுக்கு நிதி சார்ந்த நீதி வழங்குக’  ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
<p><strong>&lsquo;வங்கி ஓய்வூதியர்களுக்கு நிதி சார்ந்த நீதி வழங்குக&rsquo;</strong></p> <p>சென்னை, ஜன. 25- பொதுத்துறை வங்கி ஓய்வூதியர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் &lsquo;ஓய்வூதியச் சீரமைப்பு&rsquo; (Pension Updation) உள்ளிட்ட கோரிக்கைகளை இந்திய அரசும், வங்கி நிர்வாகங்களும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைப்பின் தலைவர் எஸ்.பி. இராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 2008-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள எம்.சி. சுக்லா வழக்கில் நிலவும் அதீத காலதாமதம் 8 லட்சம் ஓய்வூதியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஊதிய ஒப்பந்தத்தின் போதும் ஓய்வூதியம் புதுப்பிக்கப்படும் நிலையில், வங்கி ஓய்வூதியர்களுக்கு மட்டும் அதை மறுப்பது அரசியலமைப்பின் 14-ஆவது பிரிவான சமத்துவ நீதிக்கு எதிரான அநீதியாகும் என அவர் சாடியுள்ளார். பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியக் கையிருப்பு ஏறத்தாழ ரூ. 4,56,424 கோடி என்ற வலுவான நிலையில் உள்ளது. எனவே, நிதிச் சுமையைக் காரணம்காட்டாமல் 1997 மற்றும் 2002-க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி (Dearness Allowance) முரண்பாடுகளைக் களைவதுடன், 2024 மார்ச் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்ட &lsquo;முன்னாள் ஊழியர்களுக்கான சிறப்புத் தொகை&rsquo;யையும் (Ex-gratia) உயர்த்தி வழங்கி வரலாற்று அநீதியைத் துடைக்க வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசி மற்றும் மலைக்க வைக்கும் மருத்துவச் செலவுகளுக்கு மத்தியில் தவிக்கும் அறிவார்ந்த மூத்த தலைமுறையினரை &lsquo;சமூகக் கழிவாக&rsquo;க் (Social Waste) கருதாமல், அவர்களுக்கு உரிய நிதி நீதியை வழங்கி வங்கித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என ஏ.எப்.சி.சி.ஓ.எம் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.