தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழை வழங்கிடுக - ஆர்.சசிதானந்தம் எம்.பி

14 Nov 2025, 7:30 am
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழை வழங்கிடுக - ஆர்.சசிதானந்தம் எம்.பி
<p><strong>வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு தகுதிச் சான்றிதழை வழங்குக! அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்</strong></p> <p>திண்டுக்கல், நவ. 14 - வெளிநாடு களில் மருத்து வம் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் பங்கேற்பதற்பான (FMGE &nbsp;Eligibility Certificate) தகுதிச் சான்றிதழை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் ஒன்றை யும் அவர் எழுதியுள்ளார். அதில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கூறியிருப்ப தாவது: பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளி நாடுகளில் மருத்துவம் பயின்ற மருத் துவ மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (FMGE) &nbsp;கலந்து கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் தகுதி சான்றிதழுக்காக 18 மாதங்களாக காத்திருக்கின்ற னர். தகுதிச் சான்றி தழுக்காக அவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். &nbsp;2018 - 2019, 2019 - 2020-ஆம் கல்வியாண்டில் பிலிப்பைன்ஸில் பி.எஸ். (B.S.) படிப்பு அல்லது வெளிநாடுகளில் முன் மருத்துவப் படிப்பை (Pre Medical Courses) தொடங்கிய வர்கள் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். (MBBS) அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்புகள் பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் தகுதிச் &nbsp;சான்றிதழ் பெறுவதும் கட்டாய மாகும். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய மருத்துவ ஆணையம் தகுதிச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. &nbsp;வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற 400 மாணவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி 17 அன்று வெளி நாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு (FMGE ) நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் &nbsp;தகுதிச் &nbsp;சான்றி தழ் வழங்காததால், &nbsp;தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். &nbsp;வெளிநாட்டு மருத்துவப் பட்ட தாரிகள் தேர்வில் பங்கேற்பதற்கு, தகுதிச் சான்றிதழ் வழங்கிடுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும். இவ்வாறு ஆர். சச்சி தானந்தம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.