தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

70 வயதானவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்குக! மாவட்ட தலைநகரங்களில் தர்ணா

10 Feb 2026, 4:50 pm
70 வயதானவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்குக! மாவட்ட தலைநகரங்களில் தர்ணா
<p><strong>70 வயதானவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்குக! மாவட்ட தலைநகரங்களில் தர்ணா</strong></p> <p>சென்னை, பிப். 10 - 70 வயது நிறைவு செய்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரி செவ்வாயன்று (பிப்.10) மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, ஓய்வூதியர்கள் அனைவருக்கும், அனைத்து நோய்களுக்கும் கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும், கம்முடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னையில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் பி.எஸ். அப்பர் தலைமை வகித்தார். டிஆர்இயு பென்சனர்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன், சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கி. இளமாறன், மாநிலச் செயலாளர் பி. மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் என். ராமசாமி, பொருளாளர் ஜெ. பட்டாபி, இணைச் செயலாளர் அ.கெ ன்னடி பூபாலராயன் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.