ரயில்வே நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கிடுக
20 Feb 2026, 2:39 pm
<p><strong>ரயில்வே நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கிடுக</strong></p>
<p>சென்னை, பிப். 20- ராயபுரம் பகுதி 53ஆவது வட்டத்திற்கு உட்பட்ட போஜராஜன் நகர் அட்டிங்கிரவுண்டில் 5 தலைமுறைகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே நிலத்தில் வசித்து வருகின்றனர். எவ்வித அடிப்படை வசதியும் இன்றி, குடிசைப் பகுதியில் வசிக்கின்றனர். ரயில்வே தண்டவாளங்கள் ஒட்டிய ஒரு பகுதியில் தான் உள்ளனர். அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் அவர்களை வெளி யேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பாது காக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு வியாழனன்று (பிப். 19) கிளைச் செயலாளர் பி.குமார் தலைமையில் ஊர்க் கூட்டம் நடைபெற்றது‌. ரயில்வே நிலத்தை மாநில அரசு வாங்கி குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அவர்களுக்கு இலவசமாக குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், செயற்குழு ஆர்.லோகநாதன், பகுதிச்செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகி டி.வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
