60 வயதான மீனவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குக!
1 Mar 2026, 4:03 pm
<p><strong>60 வயதான மீனவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குக!</strong></p>
<p>சென்னை, மார்ச் 1 - 60 வயதான மீனவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக் கையில் இடம்பெற வேண்டிய மீன வர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் சனிக் கிழமை (பிப்.28) கூட்டமைப்பின் மாநில நிர்வாகி இரா.லோகநாதன் தலைமையிலான குழு அளித்துள்ளது. அதில், “இலங்கை அரசினால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படு வது, கைது செய்யப்படுவதைத் தவிர்த்து, கைது செய்யப்படுபவர் களை மனிதாபிமான முறையில் திருப்பி அனுப்ப தூதரக ரீதியிலான நிரந்தர ஏற்பாட்டை செய்ய வேண் டும்; மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க வேண்டும். மீன்பிடித் தடை காலத்திற்கான நிவாரணத் தொகையை நாளொன் றுக்கு 500 ரூபாய் வீதம் 30ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்த வேண்டும்; ஏரி, குளங்களில் மீன் பிடிக்கும் குத்தகை உரிமையை உள்ளுர் மீன வர்களுக்கு மட்டுமே வழங்க வேண் டும்; டீசல் மானியம் மாதம் 3 ஆயிரம் லிட்டருக்கு வழங்க வேண்டும்; மீன் மற்றும் கருவாடு வியாபாரத்தில் ஈடுபடுவோரும் மீனவர் நல வாரியத் தில் உறுப்பினராக சேருவதை உறுதி செய்ய வேண்டும்; கூட்டு பங்குதாரர் முறை மூலம் 4 படகு உரிமையா ளர்கள் இணைந்து ஒரு ஆழ்கடல் படகை இயக்க ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்” என்பன உள் ளிட்ட அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்நிகழ்வின்போது அமைப்பின் மாநில பொருளாளர் எஸ்.ஜெய சங்கரன், நிர்வாகிகள் செல்வானந்தம், எஸ்.பரமசிவன் மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஜெ.அன்புரோஸ், எஸ்.பரமமூர்த்தி, ஆர்.ரவி, வி.பி.மதிவாணன், போரூர் அஞ்சலி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.</p>
