தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக!

23 Dec 2025, 4:05 pm
70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக!
<p><strong>70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக!</strong></p> <p>சென்னையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் சென்னை, டிச. 23- 70 வயது நிறைவடைந்த வர்களுக்கு கூடுத லாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டு மென்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியா ளர்கள், வனத்துறை காவலர்கள், ஊராட்சி செய லாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஓய்வூதியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், &nbsp;மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, முழு சிகிச்சைக்கான தொகையை வழங்க வேண்டும். தொகுத்துப் பெறும் ஓய்வூதியத்தை (கம்யூடே சன்) பிடித்தம் செய்திடும் காலத்தை 11 ஆண்டு களாக குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 &nbsp;அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாயன்று (டிச.23) நந்தனம் ஓய்வூதியம் வழங்கும் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.ஜெயச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மே ளனத்தின் அகில இந்திய தலைவர் சுரேந்திர &nbsp;சௌத்ரி, துணைத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கி.இள மாறன், பொருளாளர் எம்.வி.செந்தமிழ்செல்வன், சென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.