தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக! வட்டத் தலைநகரங்களில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

11 Nov 2025, 3:41 pm
10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக! வட்டத் தலைநகரங்களில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக! வட்டத் தலைநகரங்களில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சென்னை, நவ. 11 - தேர்தல் வாக்குறுதிப்படி 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் &nbsp;வழங்க கோரி செவ்வாயன்று (நவ.11) வட்டத் தலைநக ரங்களில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1.7.25 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப் படியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். 70 வயது முடிந்த வர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ தியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், வனத்துறை காவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள் ஆகிய ஓய்வூ தியர்களுக்கும் 7 ஆயிரத்து 850 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதி யமாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி ஓய்வூதியர் அனைவருக்கும் முழுமையான சிகிச்சை தொகையை வழங்க வேண்டும். தொகுத்துப் பெறும் ஓய்வூதியத்திற்கான பிடித்தம் செய்தி டும் காலத்தை 11 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை ஆலந்தூர் வட்டாட்சியர் &nbsp;அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் கி.இளமாறன், சென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.