தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல் ஈரப்பதத்தை அதிகரிப்பதிலும் வஞ்சகம் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தஞ்சை, திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!

21 Nov 2025, 2:51 pm
நெல் ஈரப்பதத்தை அதிகரிப்பதிலும் வஞ்சகம் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தஞ்சை, திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!

நெல் ஈரப்பதத்தை அதிகரிப்பதிலும் வஞ்சகம் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தஞ்சை, திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு சென்னை, நவ. 21 - நெல் ஈரப்பத அளவை அதிகரிக்கா மல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி களின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: “கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு  தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கை யை நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற  தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காது களுக்குக் கேட்கவில்லை. கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரண மும் அளிக்காமல், ஈரப்பத அளவை யும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறி யாக்கும் பாஜக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் நவ. 23 அன்று தஞ்சாவூரிலும், நவ. 24 அன்று திருவாரூரிலும் காலை 10 மணிக்கு ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் வயிற்றிலடிக்கும் மோடி அரசுக்கு எதிராக ‘கண்டனம் முழங்குவோம்’

பெ. சண்முகம் அழைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சமூகவலைதள பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “ஒன்றிய பாஜக அரசு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அளவை 22 சதவிகிதமாக உயர்த்த மறுத்து இருப்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடூரமான செயல். மழையால் நனைந்த நெல்மணிகளை அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்குமா? ஆய்வு  என்ற பெயரில் அதிகாரிகள் நடத்தியது நாடகமா? விவசாயிகளின் விரோதியான மோடி ஆட்சிக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்!” - என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.