தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை டிச.1 மாவட்டத் தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம்

14 Nov 2025, 1:26 pm
ஒரு லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை டிச.1 மாவட்டத் தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம்
<p><strong>ஒரு லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை டிச.1 மாவட்டத் தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>வாலிபர் சங்கம் அறிவிப்பு சென்னை, நவ. 14 - அரசுத் துறைகளில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி டிச.1 அன்று மாவட்டத் தலைநகரங்களில் காத்திருப்பு போராட் டம் நடைபெறும் என்று இந்திய &nbsp;ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (நவ.14) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் &nbsp;செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. &nbsp;பிரசுரம் வெளியீடு &nbsp;இந்நிகழ்வில், &lsquo;தலை நிமிருமா? தமிழக இளைஞர்களின் வாழ்வு&rsquo; எனும் பிரசுரத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், செய லாளர் எஸ்.கார்த்திக், பொருளா ளர் தீ.சந்துரு ஆகியோர் வெளி யிட்டனர். ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு! பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் கூறியதாவது: 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உரு வாக்குவோம். காலிப் பணியிடங் களை நிரப்புவோம் என்று திமுக &nbsp;அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை செயல்படுத்தவில்லை. அண்மையில் 4,500 குரூப்-4 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு செய்தது. 13 லட்சம் பேர் &nbsp;விண்ணப்பித்து 11 லட்சம் பேர் &nbsp;தேர்வு எழுதினர். ஒரு பணியிடத் திற்கு 100 பேர் விண்ணப்பிக்கும் நிலையில் வேலையில்லா திண்டாட் டம் உள்ளது. தேர்வாணையம் ஒருமுறை மட்டுமே 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு செய்தது. அதனை யடுத்து அனைத்து அறிவிப்புகளும் சில ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மட்டுமே அறிவிப்பு செய்கிறது. கடந் தாண்டு சட்டமன்றத்தில் விதி 110-இன்கீழ் பேசிய முதலமைச்சர் 75 &nbsp;ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப் படும் என்றார். ஆனால், சராசரியாக 20 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் &nbsp;துறை போன்றவற்றில் 6 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் சராசரியாக 30 விழுக்காடு பணியிடங்கள் காலி யாக உள்ளன. மக்கள் தொகை &nbsp;வளர்ச்சிக்கேற்ப புதிய பணியிடங் களை உருவாக்காமலும், காலிப் பணி யிடங்களை நிரப்பாமலும் அரசு உள்ளது. &nbsp;இந்நிலையில், அரசுத் துறை களில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்ப அறிவிப்பு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு &nbsp;லட்சம் பணியிடங்களை நிரப்ப உட னடியாக அறிவிப்பு செய்து, பிப்ரவரி &nbsp;மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண் டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலி யுறுத்தி டிச.1 அன்று மாவட்டத் தலை நகரங்களில் காத்திருப்பு போராட் டம் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேலைவாய்ப்பு குறித்து அரசியல் கட்சிகள் திட்டவட்டமான அறிக்கையை வெளியிட இந்த போராட்டம் நிர்பந்திக்கும். இந்த போ ராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒரு கோடி இளைஞர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது சங்கத் தின் மாநில நிர்வாகிகள் ஜி.அரவிந்த சாமி, அபிராமி, நித்தியராஜ், பார்த்தி பன், வே.அருண்குமார், என்.குமரன் &nbsp;ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.