விலைவாசி உயர்வுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் எழட்டும்! - எஸ்.கண்ணன்
4 Nov 2026, 9:11 pm

விலைவாசி உயர்வுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் எழட்டும்!

விலைவாசி உயர்வு இன்று ஒரு நாட்டின் அல்லது பகுதியின் பிரச்சனையாக இல்லாமல் உலகளாவிய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரைஅனைத்துப் பகுதிகளிலும் உணவு, எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து, வீட்டு வாடகை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகள் மக்களின்வருமானத்தை விட வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டிலும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களும் மிகக் கடுமையான விலையேற்றத்தைச் சந்தித்து, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அரிசி விலை உயர்வு குறித்த அதிருப்தி கேள்விகள் உணவுஅமைச்சரை நோக்கி எழுப்பப்பட்ட போது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சியை உருவாக்கியது. தான்

ரேஷன் அரிசியை வாங்கிச் சாப்பிட்டு வளர்ந்ததாகக் கூறினார். ரேஷன் அரிசி இழிவானதல்ல; பெரும்பான்மையான மக்கள் அதைப் பயன்படுத்துகின்றனர் என்பது உண்மை. ஆனால் அமைச்சரின் பேச்சு புண்படுத்தும் வகையில் அமைந்ததே ஒழிய, தீர்வு சொல்லும் பொறுப்பான பதிலாக இல்லை.

இதேபோல் கடந்த காலத்தில் நிர்மலா சீதாராமன்வெங்காயத்தின் விலையேற்றத்தைப் பற்றி ஏளனமாகப் பேசினார். ஒன்றிய பாஜக அமைச்சர்கள் பலரும்தங்களின் பொறுப்புகளை உணராமல் எகத்தாளமாகப்பேசுவதை இப்போதும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற பேட்டிகளாகவே உள்ளன.விலைவாசி உயர்வை வெறுமனே சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பாக மட்டும் பார்க்க முடியாது. இது வருமானப் பகிர்வு, உற்பத்தி முறை, சர்வதேசவர்த்தகம், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பெருநிறுவனங்களின் லாப நோக்கம், பதுக்கல்,கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சனையாகும்.

விலைவாசி உயர்வுக்கான முக்கியக் காரணங்கள்

முதலாவதாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் முக்கியக் காரணமாக அமைந்தன. தொழிற்சாலைகள் மூடப்பட்டதும், கப்பல் போக்குவரத்து தடைபட்டதும், மூலப்பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் உற்பத்திச் செலவுகளை அதிகரித்தன.இரண்டாவதாக, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும்அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் போர், உலக எரிசக்திமற்றும் உணவுப் பொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா முக்கியமான எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உர உற்பத்தியாளர். உக்ரைன் உலகின் முக்கியமான கோதுமை மற்றும்

சோளம் ஏற்றுமதி நாடுகளில் ஒன்று. போரினால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் சர்வதேச சந்தையில்விலைகளைஉயர்த்தின.

மூன்றாவதாக, காலநிலை மாற்றம், வறட்சி, வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்கள் விவசாய உற்பத்தியைப் பாதிக்கின்றன. இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து விலைகள் உயர்கின்றன.நான்காவதாக, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டிவிகித மாற்றங்கள், சர்வதேச கடன் நெருக்கடி, எரிபொருள் விலைகள் மற்றும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகளின்பொருளாதார பலவீனம்ஆகியவையும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கின்றன.ஐந்தாவதாக, இந்தியாவில் E20 பெட்ரோல் தயாரிப்பு. வேளாண் நிலங்களில் E20 தயாரிப்பிற்குத் தேவைப்படும் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மக்காச்சோளம், உணவு தானியக் கிடங்குகளில் உள்ள அரிசி போன்ற E20 தயாரிப்பிற்கு உதவும்உணவுப் பொருட்கள் சந்தையில் உணவுத் தேவைக்குக்கிடைக்கவில்லை. இந்தியாவில் 165 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் E20 தயாரிப்பிற்காகச் செலவிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.இத்துடன், சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் பெருநிறுவனங்கள் விலைகளை நிர்ணயிக்கும் சக்தியைக் கொண்டிருப்பதும், நெருக்கடியான சூழல்களைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிப்பதும் ஆகும்.

2026-ஆம் ஆண்டின் புதிய விலை நெருக்கடி

2026-ஆம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் மீண்டும் விலையேற்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. உலக வங்கியின் 2026அக்டோபர் அறிக்கையின்படி, உலகளாவிய சரக்குப் பொருட்களின் விலைகள் இந்தஆண்டில் 23 சதவீதம் உயரக்கூடும். எரிசக்தி விலைகள் 32 சதவீதமும், உணவுப் பொருட்களின் விலைகள்2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் மொத்தமாக18 சதவீதமும் உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் மீது நடத்தும் போர் ஆகும். இது எண்ணெய் விநியோகப் பாதிப்புகள், உரங்களின் விலை உயர்வு போன்ற பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அக்டோபர் 2026 கணிப்பின்படி, உலகளாவிய பணவீக்கம் 2026-இல் 4.7 சதவீதமாகஇருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலைவாசி உயர்வுப் பிரச்சனை இன்னும் நீடிக்கும் என்பதைக் காட்டுகிறது.

மக்களின் வாழ்வில் கடும் பாதிப்புகள்

விலைவாசி உயர்வின் மிகப்பெரிய பாதிப்பு மக்களின் வாங்கும் சக்தி குறைவதாகும். ஊதியஉயர்வு விலைவாசி உயர்வுக்கு இணையாக இல்லாதபோது தொழிலாளர்களின் உண்மையான வருமானம் குறைகிறது. முன்பு ஒரு மாத வருமானத்தில் குடும்பத்தின் உணவு, கல்வி, மருத்துவம், வீட்டு வாடகைஉள்ளிட்ட செலவுகளைச் சிரமப்பட்டு சமாளித்தவர்கள் இன்று கணிசமாக கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்களுடைய உணவுச் செலவைக் குறைக்கின்றன. குழந்தைகளின் கல்வி,மருத்துவச் சிகிச்சை, ஊட்டச்சத்து ஆகியவற்றில் “சமரசம்” செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.விவசாயிகளுக்கு டீசல், உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வால்உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. சிறு தொழில்கள் மற்றும் குறு நிறுவனங்கள் மூலப்பொருள், மின்சாரம், போக்குவரத்துச்செலவுகளைச் சமாளிக்க முடியாமல் உற்பத்தியைக் குறைக்கின்றன.இதனால் விலைவாசி உயர்வு என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சனையாக இல்லாமல் வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை அதிகரிக்கும் சமூகப் பிரச்சனையாக மாறுகிறது. எனவே சமூக எதிர்ப்பும் அவசயமாகிறது.

விலைவாசி உயர்வுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்கள்

இந்தப் பொருளாதார நெருக்கடி உலகின் பலநாடுகளில் மக்கள் போராட்டங்களாக வெடித்துள்ளது. 2026 மே தினத்தன்று ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களின் நாடுகளில், தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். எரிபொருள், உணவு, மின்சாரம், போக்குவரத்து போன்ற கட்டணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்; ஊதியத்தைஉயர்த்த வேண்டும்; தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன முக்கியக்கோரிக்கைகளாக இருந்தன.

ஈரான் போர் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்தைத் தொடர்ந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தெற்காசியாவில் அதிகரித்தன. அமெரிக்காவைச் சார்ந்தACLED என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி, 2026 பிப்ரவரி 28 முதல் மே 29 வரை தெற்காசியாவில் இத்தகைய பொருளாதாரப் பாதிப்புகள் தொடர்பாக 1,200-க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பதிவாகியுள்ளன.பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.ஐரோப்பாவிலும் 2026 அக்டோபர் மாதத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி உள்ளிட்டநாடுகளில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, குறைந்த ஊதியம், பொதுச் சேவைகளின் நெருக்கடிஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் இப்போராட்டங்களில் பங்கேற்றனர். இந்தப்போராட்டங்கள் பெரும் நம்பிக்கையை, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. சரியான தலைமை மற்றும் திரட்டப்பட்டவடிவத்தில் போராடினால், மாபெரும் வெற்றியை அடைய முடியும்.

தீர்வுகள் என்ன?

1. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுகள் சில அடிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. உணவு தானியங்கள், எண்ணெய், பருப்பு உள்ளிட்டஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிச்சுமையைக் குறைக்க வேண்டும்.

4. தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்பகுறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

5. பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும்.

6. உணவுப் பொருட்களைப் பதுக்கி வைப்போர், கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம், மேற்படி செயல்கள் நடக்காமல் கண்காணிக்கப்பட வேண்டும்.

7. விவசாயிகளுக்கு உரம், விதை, மின்சாரம் உள்ளிட்ட இடுபொருட்களை நியாயமான விலையில்கிடைக்கச் செய்ய வேண்டும்.

8. பெருநிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, பதுக்கல் மற்றும் செயற்கையான விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும்.

9. கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளில் அரசின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.உலகளாவிய விலைவாசி உயர்வு இயற்கையான சந்தை மாற்றங்களால் மட்டுமே ஏற்படுவதில்லை. போர்கள், சர்வதேசப் பொருளாதார ஆதிக்கம், பெருநிறுவனங்களின் லாப நோக்கம், அரசுகளின் கொள்கைகள் ஆகியவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை அறிந்து இப்பிரச்சினையை அணுக வேண்டும்.

ஒருபுறம் பெருநிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும்போது, மறுபுறம் உழைக்கும் மக்களின் வாங்கும்சக்தி குறைந்து கொண்டே செல்கிறது. இந்த முரண்பாட்டைத் தீர்க்காமல் விலைவாசி உயர்வுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது.

எனவே விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே விலை குறைப்புக்கான போராட்டம் மட்டுமல்ல; நியாயமான ஊதியம், உணவுப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பொதுச் சேவைகள் மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டமாகும்.

தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விலைவாசி உயர்வின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதைத்தடுக்கவும் போராட வேண்டிய வரலாற்றுத் தேவை இன்று உருவாகியுள்ளது.