ஐ.நா. அவையில் போர் வெறிக்கூச்சல் நேதன்யாகுவிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!
25 Sept 2026, 11:41 pm

ஐ.நா. அவையில் போர் வெறிக்கூச்சல் நேதன்யாகுவிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

நியூயார்க், செப். 25 -இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஐ.நா. அவையில் உரையாற்றியபோது, அவருக்கு எதிராக நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.

ஐ.நா. பொது அவையில் அவர், நேதன்யாகு பேசத் துவங்கிய போது அவருக்கு அவைக்கு உள்ளேயே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் பிரதிநிதிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முழக்கங்கள் எழுப்பியும் அவரை விமர்சித்தும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நேதன்யாகு ஆதரவு நாடுகளின்பிரதிநிதிகள் சிலர் மட்டும் எழுந்து நின்று கைதட்டி ஆதரவளித்தனர்.

தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை எந்த ஒரு நாகரிகமும் இன்றி, ஆதிக்க மனப்பான்மையில் இருந்து- அவையை விட்டு இன்னும் வெளியேறாத கோழைகள் யாரேனும் இருந்தால், இப்போதே வெளியேறுங்கள் என்று கூச்சலிட்டார்.

தனது உரையில், பாலஸ்தீனர்கள் மீதானஇனப்படுகொலையை நியாயப்படுத்தி போர் வெறியை வெளிப்படுத்திய நேதன்யாகு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி துவங்கி தனது இனப்படுகொ லையை எதிர்ப்பவர்கள, ஈரான் தலைவர்கள் என பலரையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் பிரிட்டன், துருக்கி, பிரான்ஸ் போன்றதனது நட்பு நாடுகளையும் விமர்சித்தார்.மேலும் காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, சிரியா, லெபனான், ஈரான், ஏமன் மற்றும் இராக் உட்பட “7 பகுதிகளில்” இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது.“நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கொக்கரித்தார்.