முறைகேடான நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
19 May 2026, 11:56 pm
<p><strong>முறைகேடான நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், மே 19– முறைகேடான நீட் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் இடதுசாரி மாணவர், இளை ஞர் அமைப்பினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை தொடர்ந்து சிதைத்து வரும் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளறுபடிக்கு ஒன்றிய அரசு பொறுப் பேற்க வேண்டும். நீட் தேர்வில் தமி ழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, திருப்பூரில் தியாகி குமரன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்த்குமார் தலைமை ஏற்றார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க. நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செய லாளர் கு.பாலமுரளி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் மணிகண்டன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீநிதி தன்யா, புறநகர் மாவட்டச் செய லாளர் முத்துக்குமார், இளைஞர் பெரு மன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி ஆகியோர் கண்டனவு ரையாற்றினர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். முடிவில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விமல்ராஜ் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம. குறளரசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் பி.கோவிந்த சாமி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் நவீன் குமார், வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் ஏ.குமார், இரா. சிசுபாலன், இளைஞர் பெருமன்ற முன் னாள் தலைவர்கள் எஸ்.கலைச்செல் வம், இ.பி.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு ஜவான் பவன் முன்பு, இளை ஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ஜி.கல்யாணசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ப. சி.சினேகா, மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் உண்ணிகி ருஷ்ணன், இளைஞர் பெருமன்ற மாவட் டச் செயலாளர் நவீன்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தசர தன், மாவட்டச் செயலாளர் த.நவீன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி. ஏ.விஸ்வநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி அன்பு ஜனாதி பதி நன்றி கூறினார். சேலம் சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர் திவ்யா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், இந்திய மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.பவித்ரன், தலைவர் கே.டார்வின், இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் பாரதி, மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாணவர் பெரு மன்ற மாவட்டச் செயலாளர் நேதாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ராஜா, செயலா ளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பாவெல், இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலை வர் அபிமன்யு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
