ஒன்றிய அரசிற்கெதிராக போராட்டம் நடத்தப்படும்! கட்டுமானப் பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
19 Mar 2026, 3:18 pm
<p><strong>ஒன்றிய அரசிற்கெதிராக போராட்டம் நடத்தப்படும்! கட்டுமானப் பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு</strong></p>
<p>கோபி, மார்ச் 19- கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவில்லையெனில், ஒன்றிய அரசிற்கெதிராக போராட்டம் நடத்தப் படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங் களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பிரபு, ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையத்தில் புதனன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் கட்டுமானத் துறையை நம்பி ஒரு கோடிக்கும் அதிகமா னோர் உள்ளனர். இதில் கட்டுமானப் பொறி யாளர்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்த அடிப்படையில் பணிகளை தொடர முடியா மல் திணறி வருகின்றனர். தற்போது சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கம்பி ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. போர் சூழ்நி லையை காரணம் காட்டி, கார்ப்பரேட் நிறு வனங்கள் இந்த விலை ஏற்றத்தை செய் துள்ளன. இதனால் வீடு கட்டும் பணிகளை தொடங்கிய நடுத்தர வர்க்கத்தினர் விலை உயர்வால் கட்டுமானத்தை முடிக்க முடியா மல் தவிக்கின்றனர். பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்க ளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஓர் ஆண்டுக்கு முன்பு இருப்பு வைத்துள்ள நிலை யில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விலையை உயர்த்தியிருப்பது வருத்தமளிக் கிறது. எனவே, பொதுமக்கள் நலனை கருத் தில்கொண்டு கட்டுமானப் பொருட்களின் விலையை சமநிலைப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசி யல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும். மேலும், விலை உயர்வை திரும் பப்பெறாவிட்டால் போராட்டங்கள் நடத்தப் படும், என்றார்.</p>
