அனைத்து தொழிற்சங்கங்கள் விருதுநகரில் போராட்டம்
13 May 2026, 12:09 am
<p><strong>அனைத்து தொழிற்சங்கங்கள் விருதுநகரில் போராட்டம்</strong></p><p>விருதுநகர் தில்லி, உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட மாநி லங்களில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரு கின்றனர். இப்போராட்டங் களை பாஜக அரசு, காவல் துறையினர் மூலம் கடுமை யான அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கி வருகிறது. எனவே, போராடும் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டங் கள் நடத்தும் தொழிலா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடும் பாஜக அரசுகளைக் கண்டித்தும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்போரா ட்டத்திற்கு எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலர் மாடசாமி தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் தேவா ஆகியோர் முன் னிலை வகித்தனர். முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் கண்டன உரையாற்றினார். தொமுச மண்டல செயலா ளர் ராஜ செல்வம், ஏஐடியுசி பாண்டியன் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.</p>
