முந்தய பக்கம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

14 May 2026, 11:38 pm
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

அவிநாசி, மே 14- அவிநாசி அருகே நல்லிக் கவுண்டம்பாளையம் பகுதி யில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ் மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, அப் பகுதி பொதுமக்கள் வியாழ னன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நல்லிக் கவுண்டம்பாளையம் பகுதியில் 2326 எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.

இக்கடையால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், சமூக விரோதச் செயல் கள் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள், கடையை வேறு இடத் திற்கு மாற்ற வலியுறுத்தி கடையின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அந்த மனுவின் மீது உரிய முறை யில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram