அரசுப் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை
5 Jun 2026, 10:33 pm

அரசுப் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை

அரசுப் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகைகுழு சார்பில், கரூர் மாவட்டம் பாலவிடுதியில் அரசுப் பள்ளிக்கு அருகில் செயல்படும் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் பாலவிடுதியில் தமிழக அரசுக்குச் சொந்தமான மது பானக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த மதுபானக்கடை பாலவிடுதி அரசு மேல்நிலையப் பள்ளியின் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ளது.

மேலும் மது அருந்துபவர்கள் சாலையின் இருபுறமும் அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்துகின்றனர்.

பெண்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்த அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடவூர் வட்டக் குழு சார்பில் பல முறை அதிகாரி களுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக மதுபான கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியும், அரசு மதுபான கடையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு கடவூர் வட்டச் செயலாளர் பி. பழனிவேல் தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சக்திவேல், பி.ராமமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. வேல்முருகன், வட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை டாஸ்மாக் கடையை முற்றுகையிட பாலவிடுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், பொதுமக்கள் சென்றனர். அப்போது, பாலவிடுதி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விஜயசண்முகம், குளித்தலை டிஎஸ்பி (பொ) பாலகிருஷ்ணபிரபு, காவல் ஆய்வாளர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சக்திவேல், பி.ராமமூர்த்தி, வட்ட செயலாளர் பி.பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் பி. வேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 மாதத்தில் பாலவிடுதி அரசு மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் தற்காலிகமாக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.