பழங்குடி மக்களுக்கு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>பழங்குடி மக்களுக்கு மனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்</strong></p>
<p>கடலூர், டிச.10- பழங்குடி மக்கள் நல சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திட்டக்குடி வட்டத்தில் உள்ள பெண்ணாடம், கருங்குழி தோப்பு பகுதியில் வசித்து வருகிற பழங்குடி காட்டுநாயக்கன் மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு புதனன்று இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் வி.அன்பழகன் தலைமையில் ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பேசினார். இதில் பழங்குடி சங்கத்தின் மாவட்ட நிர்வாகி என்.எஸ். அசோகன், மூத்த தோழர் ஆர் ராஜேந்திரன், பெண்ணாடம் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் விஸ்வநாதன், திட்டக்குடி நகர செயலாளர் வரதன், பழங்குடி சங்க மாவட்ட துணை தலை வர் மாயவன், வாலிபர் சங்க வட்ட பொரு ளாளர் ஹரிபாபு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்ட பொருளாளர் கருப்பன், மற்றும் சத்யராஜ், கிருஷ்ணன், மூர்த்தி, கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மனுவை பெற்றுக் கொண்ட அதி காரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.</p>
