அம்பேத்கர் சிலையை திறந்து பாதுகாப்பை உறுதி செய்திடுக
23 Jul 2026, 11:46 pm
<p><strong>அம்பேத்கர் சிலையை திறந்து பாதுகாப்பை உறுதி செய்திடுக</strong></p><p>சேலம், ஜூலை 23- கெங்கவல்லி பகுதியில் அம் பேத்கர் சிலையை திறந்து வைத்து நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஓதியத்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும். சமூக பதற்றத்தை தூண்டிய வர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன் கொடுமை தடுப்பு சட்டப்படி நடவ டிக்கை எடுத்திட வேண்டும். பட்டி யலின மக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி அத்துமீறல்கள் குறித்து விரி வான விசாரணையை நடத்த வேண்டும். கைது செய்யப்பட்ட பட்டியலின மக்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்வதோடு வழக்கை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செய லாளர் பி. சுகந்தி கண்டன உரை யாற்றினார். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.கனகராஜ், என்.பிரவீன் குமார், கெங்கவல்லி தாலுகா செய லாளர் பி.தமிழ்மணி, பெத்தநாயக் கன்பாளையம் தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம், வாழப்பாடி செயலா ளர் ஜி. பூபதி, மாவட்டக் குழு உறுப் பினர் ஆர்.வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. பெருமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
