தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி மறியல்

17 May 2026, 12:46 am
மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி மறியல்

மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி மறியல்

ஈரோடு, மே 16- பூனாச்சி மற்றும் பிரம்ம தேசம் புதூர் ஆகிய பகுதி களிலுள்ள மதுபானக் கடை களை மூட வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தி யூர் - அம்மாபேட்டை சாலை யில் பூனாச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது.

முகாசிப்புதூர், அட்ட வணைப்புதூர், பூனாச்சி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைத்து தேவை களுக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் பூனாச்சி வந்து செல்வது வழக் கம்.

இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் பெரும் பாதிப்பு நிலவி வந்தது.

எனவே, இக்கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து பூனாச்சி மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள், அந்தியூர் - அம்மாபேட்டை சாலையிலுள்ள மதுபானக் கடை முன்பு அமர்ந்து வெள் ளியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கருப்பசாமி பாண்டி யன், அந்தியூர் வட்டாட்சியர் இளஞ்செழி யன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (பொ) ரகுநாதன் உள்ளிட்டோர், ஒரு வாரத்தில் மது பானக் கடை அகற்றப்படும் என உறுதிய ளித்தனர்.

அதன்பேரில் மக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோன்று, அந்தியூர் - ஆப்பக்கூடல் சாலையில் பிரம்மதேசம் புதூரில் செயல் பட்டு வரும் மதுபானக் கடைக்கு வருவோ ரால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வரு கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரி வித்த நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், வெள்ளி யன்று அப்பகுதி பொதுமக்கள் பிரம்மதே சம் புதூர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

ஆனால், மதுக்கடையை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுக்கடைக்கு அதிகாரிகள் ’சீல்’ வைத்து மூடினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.