நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
17 May 2026, 12:50 am
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, மே 16- நீட் தேர்வை ரத்து செய்ய ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக, இடது சாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு எப்போதும் நேர்மை யாக நடைபெறாது, அதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே திரா விடர் கழகம் மாவட்டத் தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் துரை.செந்தமிழ் செல்வன், தளபதி முருகேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாநிலக் குழு உறுப் பினர் ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.எஸ்.கனகராஜ், சிபிஐ தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் திராவிடர் கழக சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், திமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னார். இதில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கன கராஜ் என்.பிரவீன் குமார், எஸ். எம்.தேவி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். ஈரோடு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திக மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இதில் திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், பழனிசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன், மூத்த தோழர்கள் கே.துரை ராஜ், ப.மாரிமுத்து, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.விஜய ராகவன், பி.சுந்தரராஜன், முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் முக மது ஆரிப், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி பாவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, திராவிடர் கழக இளை ஞரணி மாநில துணைச்செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சோ.அருச் சுனன், ஆர்.மல்லிகா, விசிக மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டி யன், மண்டலச் செயலாளர் சக்தி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
