போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி முழக்கம்
17 Jul 2026, 12:25 am
<p><strong>போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி முழக்கம்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 16- திருவண்ணாமலை அரசுப் போக்கு வரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணி யில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி னர். மேலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடி யாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், 2026 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய ஓய்வுகாலப் பணப்பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே.நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மண்டலப் பொதுச் செயலாளர் எஸ். முரளி, மண்டலத் தலைவர் எ. சேகர் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ஆர். நாராயணன், எம். தாமோதரன், டி. வெங்கடேசன், எம்.பாலாஜி, ஜே. ஜம்பு குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
