அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
26 Sept 2026, 1:02 am
<p><strong>அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், செப்.25-அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி செங்கப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கப்பள்ளியில் உள்ள ஊத்துக்குளி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடிப்படை ஊதியம்ரூ.18,000 தேர்தல் வாக்குறுதியை உடனே அமுலாக்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர்ஜெ.கந்தசாமி, மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கு.சரஸ்வதி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர். மாதர் சங்க தாலுகா செயலாளர் ப.வண்ணக்கொடி, சிஐடியு சங்க நிர்வாகிகள் அர்ச்சுனன், ரத்தினசாமி உட்பட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
