தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வேயில் ஆட்குறைப்பு – சமையல் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராய்! இடதுசாரிகள், விசிக ஆவேசம்

7 May 2026, 11:47 pm
ரயில்வேயில் ஆட்குறைப்பு – சமையல் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராய்! இடதுசாரிகள், விசிக ஆவேசம்

ரயில்வேயில் ஆட்குறைப்பு – சமையல் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராய்! இடதுசாரிகள், விசிக ஆவேசம்

திருப்பூர், மே 7- ரயில்வேயில் ஆட்குறைப்பு, எளிய மக்களை பாதிக்கும் வகையில், சமை யல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக கூட்டணி அரசை கண் டித்து, தமிழ்நாட்டில் இடதுசாரிகள், விசிக-வினர் வியாழனன்று ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில், வணிக சமை யல் எரிவாயு விலையை ஒன்றிய மோடி அரசாங்கம் உயர்த்தியதன் விளை வால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது

. உடனடி யாக வணிக சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் இரண்டு சதவீத பணியிடக் குறைப்பு செய்துள்ளது இளைஞர்க ளின் வேலைவாய்ப்பிற்கு எதிரானது.

ரயில்வே துறையில் பணியிட குறைப்பை கைவிட வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் இணைந்து வியாழ னன்று ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, திருப்பூர் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் முன்பு, சிபிஐ மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துக்கண்ணன், சிபிஐ புற நகர் மாவட்ட துணைச்செயலாளர் மோகன், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் முத்துக் கிருஷ்ணன், விசிக நிர்வாகி ஓ.ரங்க சாமி ஆகியோர் உரையாற்றினர்.

இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி உட்பட இடதுசாரி கட்சிகள், விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை கோவையில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.

ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சிவசாமி, சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணி யன், விசிக மாவட்டச் செயலாளர் முக மது அலி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு ஜவான் பவன் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சாதிக் தலைமை வகித்தார்.

சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ப.ம. பாலமுருகன், சிபிஐ (எம்எல்) விடு தலை மாநிலக்குழு உறுப்பினர் ஏ. கோவிந்தராஜ், விசிக ஈரோடு மண்ட லச் செயலாளர் ஏ.ஜாபர் ஆகியோர் கண் டன உரையாற்றினர்.

பெருந்திரளா னோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட் டத்தின் முடிவில், கோபி தொகுதி விசிக பொறுப்பாளர் கஸ்தூரி தேவி நன்றி கூறி னார்.

தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லி பாபு, ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுனன், வே. விஸ்வநாதன், ஆர்.மல்லிகா, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல் வம், மாநில நிவாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன், விசிக மாநில கருத்தி யல் பரப்புச் செயலாளர் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளர்கள் த.கு.பாண்டி யன், கருப்பண்ணன், சாக்கன்சர்மா, சென்னகிருஷ்ணன், ராஜகோபால், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாநிலக் குழு உறுப்பினர் சி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன், விசிக வடக்கு மாவட்டச் செய லாளர் ராமன், சிபிஐ(எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.பிரவீன்குமார், எம்.கனகராஜ், ஜி.கணபதி, கே.ராஜாஜி, ஏ.கலியபெருமாள், எஸ்.எம்.தேவி, என்.கிருஷ்ணமூர்த்தி, இடைக்கமிட்டி செயலாளர்கள் பி.கணேசன், ஏ.சுந்தர மூர்த்தி, சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், விசிக மாவட்ட நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விசிக மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார்.

சிபிஐ மாவட்டச் செயலாளர் போஜராஜ், சிபிஎம் தாலுகா செயலாளர் நவீன் சந்திரன், விசிக மண்டல துணைச்செய லாளர் கட்டாரி ஆகியோர் கண்டன வுரையாற்றினர்.

ஏராளமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் முடி வில், சிபிஐ நிர்வாகி சுப்பிரமணி நன்றி கூறினார்.

இதேபோன்று, கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.

இதில் சிபிஐ ஏரியா செயலா ளர் முகமது கனி, விசிக மாவட்டச் செய லாளர் புவனேஸ்வரன், மண்டல துணைச்செயலாளர் சகாதேவன், நகரச் செயலாளர் துயில்மேகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜன், யோகண்ணன், குஞ்சு முகமது, சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் ராசி.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், சிபிஎம் ஏரியா செயலாளர் எம்.ஆர்.சுரேஷ் நன்றி கூறி னார்.

நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, விசிக மண்டலச் செயலாளர் பழ.மணி மாறன், சிபிஐ மாவட்டக்குழு நிர்வாகி பி. வி.சிவக்குமார், சிபிஐ (எம்எல்) விடு தலை மாவட்டக்குழு உறுப்பினர் வெங் கடேசன் ஆகியோர் தலைமை வகித் தனர்.

இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பி.அன்புமணி, விசிக மண்டல துணைச்செயலாளர் காமராஜ், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டக்குழு உறுப்பினர் புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.