தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

22 May 2026, 1:38 am
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>புதுச்சேரி,மே.21- பெட்ரோல்,டீசல்,கேஸ் விலையை உயர்த்தி உள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தியதை போல், தற்போது பெட்ரோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 4 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர்.எனவே விலை உயர்வை உடனே திரும்ப பெறக்கோரி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநில செயலாளர்ஆ.மு.சலீம், சிபிஎம் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் வெ.பெருமாள் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். இப்போராட்டத்தில் இடதுசாரி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.