அதிகாரிகளின் சமரசத்தால் போராட்டம் ஒத்திவைப்பு
17 Dec 2025, 4:11 pm
<p><strong>அதிகாரிகளின் சமரசத்தால் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p>
<p>ஈரோடு, டிச.17- ஜம்பை பேரூராட்சியில் அடிப்படை பிரச் சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற காத்திருக்கும் போராட்டம். அதிகாரி களின் சமரசத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், ஜம்பை பேரூராட்சிக் குட்பட்ட வாய்க்கால்பாளையம், பெரியார் நகர் வீதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி யேறாமல் தேங்கி நிற்கும் கழிவுநீர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், கழிவுநீர் வெளியேற ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வழியேற்படுத்தியது. மேலும், குடி யிருப்பைக் கடந்து செல்ல குழாய்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. வீதி யின் நடுவில் இருக்கும் மின் கம்பத்தை மாற்றி யமைக்க வாரியத்திற்கு விண்ணப்பிக்கப்பட் டுள்ளது. உரிய வழிமுறையில் விரைவில் மின் கம்பம் மாற்றியமைக்கப்படும். அதன்பிறகு தடைப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் போன்ற உத்தர வாதங்களை பேரூராட்சியின் செயல் அலுவ லர் மற்றும் நிர்வாகத்தினர் அளித்தனர். இதனையேற்று போராட்டக்குழுவினர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவ தாக அறிவித்தனர்.</p>
