பன்னீர்வாக்கம் வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனைப்பட்டா அரசு அதிகாரி வாக்குறுதியால் போராட்டம் ஒத்திவைப்பு
5 Mar 2026, 3:59 pm
<p><strong>பன்னீர்வாக்கம் வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனைப்பட்டா அரசு அதிகாரி வாக்குறுதியால் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 5- பன்னீர்வாக்கும் வேட்டைக் காரன் இன மக்க ளுக்கு விரைந்து குடிமனை பட்டாக்கள் வழங்கப்படும் என பொன்னேரி வட்டாட்சியர் உறுதியளித்ததால் புதனன்று (மார்ச் 4), நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த பன்னீர்வாக்கத்தில் வேட்டைக் காரன் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம், காலமாக வசித்து வரு கின்றனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களும் பிறகு, இவர்க ளுக்கு 2023 ஆம் ஆண்டு 57 குடும்பங்களுக்கு கணினி பட்டாக்கள் வழங்கப்பட்டது. இவற்றில் 9 குடும்பங்க ளுக்கு இன்னும் கணினி பட்டாக்கள் வழங்கவில்லை. மேலும் கொடுத்த கணினி பட்டாக்களில் பட்டாதாரர்களில் 8 பெயர்களில் ஏற்பட்டுள்ள எழுத்து பிழைகளை திருத்தம் செய்து தரவேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதிகாரிகள் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாக்கள் கிடைக்காததால் சாதாரண ஏழை மக்கள் அரசின் சலுகைகள் கூட பெறமுடியாமல் உள்ளனர். இந்த நிலையில் புதனன்று (மார்ச் 4), பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.இதனை தொடர்ந்து செவ்வாயன்று (மார்ச் 3), மாலை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் இ.கங்காதுரை, மாவட்ட செயலாளர் ஜி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
