எஸ்ஐஆர்-யை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.26இல் தர்ணா
16 Nov 2025, 3:30 pm
<p><strong>எஸ்ஐஆர்-யை ரத்து செய்ய வலியுறுத்தி நவ.26இல் தர்ணா</strong></p>
<p>சேலம், நவ.16- தமிழ்நாட்டில் மேற்கொள்ளப் பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நவ.26 ஆம் தேதி தர்ணா நடைபெறும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய விவசாயிகள் முன் னணி (எஸ்கேஎம்) சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஏ. ராமமூர்த்தி தலைமையில் அண் மையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில், அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய் யப்பட்டு, அதற்குச் சட்டபூர்வ அங் கீகாரம் கொடுக்க வேண்டும். கட னிலிருந்து முழுமையாக விடுதலை அளிப்பது; அதாவது அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதா 2021ஐ ரத்து செய்வது உள்ளிட்ட ஒத்துக்கொண்ட கோரிக் கைகளை ஒன்றிய அரசு உடனே அமலாக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்று சொல் லப்படுகிற வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த நடவ டிக்கையைத் தமிழ்நாட்டில் கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி நவ.26 ஆம் தேதியன்று ஆத்தூர் மற்றும் சேலம் ஆகிய இரு மையங் களில் தர்ணா மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத் திற்கு, அமைப்பின் மாநில செயற் பாட்டு குழு உறுப்பினர் சந்தரமோ கன், மாவட்ட நிர்வாகிகள் என்.கே. செல்வராஜ், அய்யந்துரை, அன்பு, நடராஜன், சரவணன், பாலன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
