பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
19 May 2026, 9:11 pm

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 19 - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வலி யுறுத்தித் தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாண வர் மற்றும் வாலிபர் அமைப்புகள் இணைந்து செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை சைதாப் பேட்டை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் இப்போராட்டத்தை முன்னெடுத்தன.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் சி.மிருதுளா, “தேசிய தேர்வு முகமை (NTA) தொடர்ந்து தேர்வுகளை முறையாக நடத்தத் தவறி, மாணவர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.

நீட் தேர்வு மற்றும் ஜூன் 21 அன்று அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு ஆகியவற்றினை முழுமையாக ரத்து செய்துவிட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும்.

இது குறித்துத் தமிழ்நாடு முதல மைச்சர் சி.ஜோசப் விஜயிடம் நேரில் வலி யுறுத்திய போது, உரிய முன்னெடுப்புகளை மேற் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.அமர்நீதி தலைமை வகித்தார்.

இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் தீ.சந்துரு, மாவட்டத் தலைவர் என்.குமரன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நிர்வாகி விஷ்ணு மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற் றுப் பேசினர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.