நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
17 May 2026, 12:53 am
<p><strong>நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் காஞ்சிபுரத்தில் திராவிடர் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழக தலைவர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், சிபிஎம் மாவட்டச்செயலாளர் கே.நேரு, சிபிஐ நிர்வாகி கமலநாதன், விசிக நிர்வாகி மதி ஆதவன் மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ் உள்பட பலர் பேசினர்.</p><p>மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வனவேந்தன், மாவட்டச் செயலாளர் சின்னசாமி, நிர்வாகிகள் சிவந்தி அருணசலம், கண்மணி, தமுஎகச மாநில நிர்வாகி எழுத்தாளர் கமலாலயன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் விசிக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.</p>
