நவ.26 இல் உடுமலையில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் முடிவு
20 Nov 2025, 3:46 pm
<p><strong>நவ.26 இல் உடுமலையில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் முடிவு</strong></p>
<p>உடுமலை,நவ.20- உடுமலை சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயத் தொழிலாளர் சங்க கூட்டம் நடை பெற்றது. இதில், டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேல் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூறும் வகையில் வரும் நவ.26 ஆம் தேதி இந்திய நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக போராட் டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக உடு மலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தின் முன்பு நவ.26 ஆம் தேதி அனைத்து விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் மதுசூ தணன், தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் அருண்பிரகாஷ், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் உடுமலை செயலாளர் கனகராஜ் மற்றும் ஏஐடியுசி, ஐஎன் டியுசி, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
