குடிமனை பட்டா வழங்ககோரி திருத்தணியில் ஆர்ப்பாட்டம்
29 Jan 2026, 5:39 pm
<p><strong>குடிமனை பட்டா வழங்ககோரி திருத்தணியில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று வட்டங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் வியாழனன்று (ஜன.29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர் தமிழ்அரசு, சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் நந்தகுமார், குப்பன், ஏழுமலை உட்பட்ட பலர் பேசினர்.</p>
