தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் மறியல்: 7 மையங்களில் 2300 பேர் பங்கேற்பு

12 Feb 2026, 4:57 pm
திருப்பூர் மாவட்டத்தில் மறியல்: 7 மையங்களில் 2300 பேர் பங்கேற்பு
<p><strong>திருப்பூர் மாவட்டத்தில் மறியல்: 7 மையங்களில் 2300 பேர் பங்கேற்பு</strong></p> <p>திருப்பூர், பிப்.12 - ஒன்றிய பாஜக மோடி அரசின் தொழி லாளர், விவசாயிகள், மக்கள் விரோதக் &nbsp;கொள்கைகளுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் தொழிற் சங்கங்கள், ஐக்கிய விவசாய முன்னணி யினர் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்து 300 &nbsp;பேர் பங்கேற்றனர். மோடி அரசின், தொழிலாளர்க ளுக்கு துரோகம் விளைவிக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வும், விதை மசோதா, மின்சார சட்ட &nbsp;திருத்தம், விவசாயிகளுக்கு எதிரான &nbsp;நடவடிக்கைகளை கைவிடவும், &nbsp;அனைத்து தரப்பு தொழிலாளர்களுக் கும் குறைந்தபட்ச மாத ஊதியம் &nbsp;ரூ.26ஆயிரம் வழங்க சட்டம் இயற்ற வும், விவசாய தொழிலாளர் வாழ்வா தாரத்தை பறிக்கும் கிராமப்புற நூறு நாள் வேலை திட்டத்தை சிதைப்பதை கண்டித்தும், பொதுத்துறை பங்கு களை தனியாருக்கு விற்பதை எதிர்த் தும் வியாழனன்று அகில இந்திய பொது &nbsp;வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய தொழிற்சங்கங்கள், விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு, விவசா யத் தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்ற &nbsp;இப்போராட்டம் திருப்பூர் மாவட்டத்தில் &nbsp;திருப்பூர், அவினாசி, காங்கயம், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலைப் பேட்டை, பல்லடம் ஆகிய ஏழு மையங்க ளில் நடைபெற்றது. அவிநாசி அவிநாசியில் சிஐடியு, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சேவூர் சாலை வழியாக பேரணியாக அவிநாசி தலைமை தபால் நிலையம் நோக்கி சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு விசைத்தறி சம்மேளனம் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு &nbsp;பொதுத்தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் ராஜன், கட் டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் &nbsp;மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர் கனகராஜ், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழ னிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க &nbsp;மாவட்டத் தலைவர் சண்முகம், விவ சாய சங்க ஒன்றியச் செயலாளர் வெங்க டாசலம், சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் &nbsp;முருகன்,மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் கவுரி மணி, வாலிபர் சங்க ஒன்றியச் &nbsp;செயலாளர் வடிவேல், ஏஐடியூசி சார்பில் மாவட்ட நிர்வாகி மோகன், அவிநாசி நிர்வாகிகள் முத்துசாமி, சண் முகம், செல்வராஜ், கந்தசாமி உள் ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்தப் &nbsp;போராட்டத்தில் எம்எல்எப் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா, அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன் னணி, மாதர், வாலிபர், மாணவர், அமைப்புகளின் சார்பில் வியாழனன்று காலை 11 மணியளவில் ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் மைதானத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று பரோடா வங்கி முன்பு மறியல் &nbsp;போராட்டம் நடைபெற்றது. &nbsp;இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.கந்த சாமி தலைமை வகித்தார். ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ச.செல் வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்(சிபிஎம்) ஆர்.குமார், &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் (சிபிஐ) எஸ்.சின்ன சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலா ளர் யூனியன் மாநில துணைத் தலைவர் &nbsp;கே.சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார் கள். இதில் திமுக தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் என்.பிரபு, நகர பொறுப் பாளர் செ.பெ.திருமூர்த்தி, இந்திய கம் யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கு. சரஸ்வதி, &nbsp;காங்கிரஸ் கட்சி தெற்கு வட்டாரத் தலைவர் எம்.சி.எஸ்.மனோஜ்குமார், மனிதநேய ஜனநாயக கட்சி பொறுப்பாளர் சாகுல் ஹமீது உட்பட திரளான தொழிலாளர்கள், மாதர்கள் கலந்து கொண்டனர். பல்லடம் பல்லடம் பேருந்து நிலையம் முன் பாக சாலை மறியல் நடைபெற்றது. மறி யல் போராட்டத்திற்கு சிஐடியூ சார்பில் &nbsp;ஆர். பரமசிவம், ஏஐடியுசி சார்பில் கணேஷ் ஆகியோர் தலைமை தாங்கி னர். இப்போராட்டத்தில் சிஐடியூ, ஏஐ டியூசி, யுடியுசி தொழிற்சங்சங்கள் சார்பாக ஆண்கள், பெண்கள் என &nbsp;சுமார் 200 பேர் பங்கேற்றனர். மறியலில் &nbsp;ஈடுபட்டவர்களை பல்லடம் காவல்து றையினர் கைது செய்து தனியார் மண்ட பத்தில் வைத்தனர். ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் வை.பழனிசாமி, லோகநாதன், சுப்பிரமணி, ஆகியோர் பங்கேற்றனர். தாராபுரம் தாராபுரத்தில் நடைபெற்ற மறியல் &nbsp;போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, &nbsp;ஐஎன்டியுசி, எல்பிஎப் சங்கங்களைச் சேர்ந்தோர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர். &nbsp;ஐஎன்டியுசி மாவட்ட துணைச் செய லாளர் ராஜேந்திரன் தலைமையில் ஐஎன்டியுசி வக்கீல் தென்னரசு, சிஐடியு &nbsp;பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் &nbsp;பொன்னுசாமி, விதொச நிர்வாகி வெங் கட்ராமன், எல்பிஎப் அந்தோணி, ஏஐடி யுசி ரவி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் என்.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். காங்கேயம் காங்கேயத்தில் பஸ் நிலையம் அரு கில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் தொழிலாளர்கள் பங்கேற்று சுமார் 70 &nbsp;பேர் கைதானார்கள். சிஐடியு சார்பில் &nbsp;ஆர்.செல்வராஜ், ஏஐடியுசி சார்பில் &nbsp;ராஜேந்திரன் ஆகியோர் தலைமை ஏற்ற னர். மறியலில் பங்கேற்று கைதானவர் களை தனியார் மண்டபத்தில் அடைத்து &nbsp;வைத்து பிறகு காவல் துறையினர் விடு வித்தனர். உடுமலை: உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள எல்ஐசி அலுவல கத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் &nbsp;போராட்டம் நடைபெற்றது. இந்த மறி யல் போராட்டத்திற்கு எல்பிஎப் தலை வர் நாகமாணிக்கம் தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், மாவட்டதுணைச் செயலாளர் ஜெகதீ சன், சிஐடியு பஞ்சாலை சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வராஜ், அகில &nbsp;இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பஞ்ச லிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் கனக ராஜ், வடிவேல், ஆறுமுகம், உடுமலை ஆட்டோ சங்கத்தின் தண்டபாணி, சிஐ டியு கட்டுமான சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பன்னீர் செல்வம், &nbsp;தமிழ்நாடு தென்னை விவசாயிகள் &nbsp;சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உடுக் கம்பாளையம் பரமசிவம், தமிழ்நாடு &nbsp;விவசாயிகள் சங்கத்தின் அருண்பிர காஷ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் &nbsp;இசாக், விசிக மாவட்டச் செயலாளர் &nbsp;சதிஷ்குமார், எம்எல்எப் ஈஸ்வரன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். &nbsp;பொது வேலைநிறுத்தம் திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ &nbsp;உள்ளிட்ட பல பகுதிகளில் 25 சதவீதத் திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர். &nbsp;வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களில் பணிபுரிவோர், போக்குவ ரத்து மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலைநி றுத்தத்தில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறி யல் போராட்டத்தில் 2 ஆயிரத்து 276 பேர் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.