அமெரிக்க அரசின் அதிகார தாக்குதலை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>அமெரிக்க அரசின் அதிகார தாக்குதலை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.7- வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந் நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ள அமெரிக்க ஏகாதிபத்திய அரசை கண்டித்து திருப்பூர், ஊத்துக்குளி, உடுமலை, அவிநாசி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்டச் செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் கே.ரங்கராஜ், சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார், மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.முத்துசாமி, நிர்வாகிகள் பி. பாலன், ஒய்.அன்பு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உடுமலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரக்குழு சார்பில் புதனன்று எஸ். வி.புரம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி கிளைச் செயலாளர் சுதாசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக் குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரச் செய லாளர் தண்டபாணி மற்றும் நகரக்குழு உறுப் பினர் சக்திவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். அவிநாசி: அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவி நாசி ஒன்றியக் குழு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், அவிநாசி ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி: அணைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் வண் ணகொடி தலைமையில் செவ்வாயன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பவித்ரா தேவி, மாவட்டச் செயலாளர் எஸ்.பானுமதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டத் தலைவர் விமல் ஆகியோர் கண் டன உரையாற்றினர். இதில், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி, துணைச் செயலாளர் பானுமதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், வாலிபர் சங்க ஊத்துக்குளி தாலுகா செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.</p>
