தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த கோரி திருப்பத்தூரில் காத்திருப்பு போராட்டம்

18 Dec 2025, 5:31 pm
வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த கோரி  திருப்பத்தூரில் காத்திருப்பு போராட்டம்
<p><strong>வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த கோரி &nbsp;திருப்பத்தூரில் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>திருப்பத்தூர், டிச.18- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலை மையில் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தின் கமிட்டி தலைவர் லோகநாதன் துவக்கி வைத்தார். இதில் மாநில பொருளாளர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். கோரிக்கைகள் போராட்டத்தில் வன உரிமைச் சட்டம் 2006யை முழுமையாக அமல்படுத்தி வன நிலம் அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும், நடுக்குப்பம் முதல் விளாங்குப்பம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும், மலைவாழ் மக்களுக்கு அரசு தொகுப்பு வீடு ரூ.10 லட்சம் &nbsp;ஆக உயர்த்த வேண்டும், மலைகளில் ஆடு மாடு மேய்ப்பதற்கு அபராதம் விதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீண்ட காலமாக அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், &nbsp;சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கேசவன், தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் ஆனந்தன், தலைவர் சிங்காரம், வீரபத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.