சட்டவிரோத குவாரிகளை மூடக் கோரி திருநெல்வேலியில் இன்று போராட்டம்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>சட்டவிரோத குவாரிகளை மூடக் கோரி திருநெல்வேலியில் இன்று போராட்டம்</strong></p>
<p>சென்னை, நவ.14 - நெல்லை மாவட்டத்தில் செயல் படும் சட்டவிரோத கல்குவாரிகளை மூட வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியுசிஎல்) தேசிய பொதுச் செயலாளர் சுரேஷ் வலி யுறுத்தி உள்ளார். கனிமவளக் கொள்ளைக்கு எதி ராக நவ.2 அன்று நெல்லையில் அறப்போர் இயக்கம் சார்பில் பொது விசாரணை நடைபெற்றது. இந்த நிகழ்வில் குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக வந்த ஒரு கும்பல் கூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்தது. மேலும், பியுசிஎல் பொதுச் செயலாளர் சுரேஷ் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த பிரச்ச னையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சென்னையில் வெள்ளியன்று (நவ.14) செய்தியாளர் களிடம் சுரேஷ் கூறுகையில், “பொது விசாரணையில் புகுந்து சுமார் 25 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. ஒருவரை மட்டுமே காவல் துறையினர் இழுத்துச் சென்றனர். எஞ்சியவர்களை வெளியேற்றவோ, தடுக்கவோ இல்லை. அங்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு மாறாக, காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இந்த தாக்குதலில் தொடர்பு டைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். அரசு கண்ட றிந்து, 262 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சட்டவிரோத குவாரி களை முழுமையாக மூட வேண்டும். இந்த குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாது காக்கும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். இந்தப் பிரச்சனையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும். இதனை வலியுறுத்தி நவ.15 அன்று திருநெல்வேலியில் அரசியல் கட்சிகள் உட்பட சுமார் 60 அமைப்பு கள் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார். இந்நிகழ்வில் ஜெயராமன் (அறப்போர் இயக்கம்), அப்துல் சமது (மமக), சி.மகேந்திரன் (சிபிஐ) உள்ளிட் டோர் உடனிருந்தனர்.</p>
<p> </p>
