செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்
19 Dec 2025, 6:05 pm
<p><strong>செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்</strong></p>
<p>கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் செவிலியர் வானதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், கவியரசு, ஓய்வு சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், தமிழ்நாடு நிர்வாக ஊழியர் சங்க மருத்துவத்துறை பாஸ்கரன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.</p>
<p>முதலாளிகளின் நலனுக்காகவும், ஆர்எஸ்எஸ் மதவாத அரசியலை செயல்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக மானியக் குழு , அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஆகிய அமைப்புகளை கலைத்துவிட்டு விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷக் என்ற அமைப்பை உருவாக்கும் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி வெள்ளியன்று (டிச.19) சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர். மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் கு.தமிழ், கிளைச் செயலாளர் முத்து கணேஷ் உள்ளிட்டோர் பேசினர்.</p>
