நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி சாத்தூரில் போராட்டம்
24 Jul 2026, 9:59 pm
<p><strong>நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி சாத்தூரில் போராட்டம்</strong></p><p>சாத்தூர், ஜூலை.24- தலைநகர் தில்லியில் அமைதியான முறையில் போராடி வரும் மாணவர் கள் மீது ஒன்றிய பாஜக அரசின் காவல்துறை கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைக் கண்டித்தும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சிஐடியு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் உள் ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சாத்தூர் முக்குராந்த லில் நடைபெற்ற இப்போ ராட்டத்திற்கு மாதர் சங்க நிர்வாகி நாச்சியார் தலைமை யேற்றார். துவக்கி வைத்து விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ் பேசினார். சிஐடியு தலைவர் பி.பால சுப்பு, வாலிபர் சங்கம் சார்பில் கருப்பசாமிஆகியோர் விளக்கிப் பேசினர். மாதர் சங்க முன்னாள் மாவட்ட பொ ருளாளர் எஸ்.சரோஜா கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
