இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராமேஸ்வரம் நகரில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கே.இ. நாசர்கான் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சிவாஜி, க.கருணாகரன், தாலுகா குழு உறுப்பினர் ஜி.சிவா, மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ஐஸ்டின், ஏ. ஆரோக்கிய நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p>மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000 இலிருந்து ரூ.2000 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாகவும், கோடை சிறப்பு தொகை ரூ.2000 உடன் சேர்த்து மொத்தம் ரூ.5000 பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதனை வரவேற்று சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். நகரம் முழுவதும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாக அவர் தெரிவித்தார்.</p>
