தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிகளை மீறும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி புதுச்சேரியில் மறியல்

27 Feb 2026, 5:32 pm
விதிகளை மீறும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி புதுச்சேரியில் மறியல்
<p><strong>விதிகளை மீறும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி புதுச்சேரியில் மறியல்</strong></p> <p>புதுச்சேரி, பிப்.27- தேசிய நெடுஞ்சாலைகளில் விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி புதுச்சேரியில் வெள்ளி யன்று (பிப்.27) &nbsp;மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது. புதுச்சேரி மாநிலம் கடலூரை ஒட்டியுள்ள சேலியமேடு பகுதி யில் தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு புறம்பாக, விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. &nbsp;நெடுஞ்சாலை விதிக்கு புறம்பாக 60 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஒரு சுங்கச்சாவடி என்ற விதிக்கு மாறாக, புதுச்சேரி மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளால் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே இச்சுங்கச்சாவடி களை அகற்றக்கோரி சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கொண்ட போராட்டக் குழுவின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடியை முற்றுகை யிட போராட்டக் குழுவினர் வெள்ளிக் கிழமை நான்கு சக்கர வாகனங்களுடன் செல்வதற்கு தயாராகினர். உடனே அவர்களை காவல்துறையினர் தடுத்த னர். பின்னர் காவல்துறையினரின் நடவடிக்கை களை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து கோரிமேடு சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தை: பின்னர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகள் சிஐடியு உள்ளிட்ட தலைவர்களிடம் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன், தனியார் போக்கு வரத்து தொழிலாளர் சங்க செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.