தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கேயத்தில் காத்திருப்புப் போராட்டம்

21 Jan 2026, 3:58 pm
வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கேயத்தில் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கேயத்தில் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன. 21 - காங்கேயம் வட்டத்துக்குட் பட்ட பகுதிகளில் ஏழை, எளிய மக்க ளுக்கு வீட்டு மனைப் பட்டா கோரி மனுக் கொடுத்தும் இதுவரை பட்டா &nbsp;வழங்கப்படாத நிலையில், வட்டாட்சி யர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் பட்டது. காங்கேயம் வட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நத் தக்காடையூர் பகுதி மக்களுக்கு இல வச பட்டா கேட்டு 2024 ஆகஸ்ட் 14ல் &nbsp;காங்கேயம் வட்டாட்சியரிடம் 152. மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதற்க டுத்து காங்கேயத்தில் 2024. டிசம்பர் &nbsp;31 ல் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் ஊர்வலமாக &nbsp;சென்று காங்கேயம் வட்டாட்சியரிடம் &nbsp;972 மனுக்கள் வழங்கப்பட்டன. &nbsp;இதன் பிறகு பட்டா கொடுக்க வலி யுறுத்தி வெள்ளகோயில் சிவநாத புரத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண் கள் கலந்து கொண்ட தெருமுனை கூட்டம் நடத்தி 2025 மே 13 அன்று &nbsp;வெள்ளகோவில் கிராம நிர்வாக அலு வலகம் முன்பு கட்சி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட் டது. மீண்டும் ஜூன் 3ஆம் தேதி நத்தக் காடையூரில் கிராம நிர்வாக அலுவ லகம் முன்பு கட்சி சார்பில் காத்தி ருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இத்தகைய தொடர் போராட்டங் கள் நடத்தியும் இதுவரை வருவாய்த் &nbsp;துறை நிர்வாகம் ஏழை, எளிய மக்க ளுக்குப் பட்டா வழங்க எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஆண்டு முழுவதும் பட்டா &nbsp;வழங்கப்படும் என்று சட்டமன்றத் தில் &nbsp;அறிவித்தார். ஆனால் பட்டா கேட்டு &nbsp;மனு கொடுத்து ஓர் ஆண்டுகள் ஆகி யும் மனு கொடுத்த மக்களுக்கு பட்டா &nbsp;வழங்கப்படவில்லை. &nbsp;இந்த நிலையில் பட்டா கோரிக் கையை வலியுறுத்தி தமிழக அரசு &nbsp;வருவாய்த்துறை நிர்வாகம் உடனடி யாக பட்டா வழங்க வலியுறுத்தி காங் கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு &nbsp;ஜனவரி 20 அன்று காத்திருப் புப் போராட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா பொறுப்புச் செயலாளர் இரா.செல்வராஜ் தலை மையில் நடைபெற்ற இப்போராட்டத் தில் கட்சியின் திருப்பூர் மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் த.ஜெயபால் &nbsp;பங்கேற்று போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். பட்டா வழங்குவது சம் பந்தமாக காங்கேயம் துணை வட் டாட்சியர் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினார். பட்டா வழங்கு வதற்கான நிர்வாகரீதியான ஆரம்பக் &nbsp;கட்டப் பணிகள் நடைபெற்று வருகி றது. விரைவாக பட்டா வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி &nbsp;அளித்தார். &nbsp;இந்த பேச்சுவார்த்தையில் காங் கேயம் காவல்துறை உதவி ஆய்வா ளர் த.துரைசாமி, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பி னர் ஆர்.வின்சென்ட், பி.கருப்புசாமி, &nbsp;ஜெ.ராமநாதன், எம்.சுப்பிரமணியன் மற்றும் கிளைச் செயலாளர்கள் சிவ நாதபுரம் வி.லோகேஸ்வரன், வெள் ளகோவில் வடக்கு ரோடு எம்.சரவண குமார், நல்லி கவுண்டர் வலசு பி. வேலுச்சாமி, முத்தம்பாளையம் கிளைச் செயலாளர் ஏ.பழனிச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி. செல்லமுத்து உள்ளிட்டோர் பங் கேற்றனர். காங்கேயம் பேருந்து நிலையத்தி லிருந்து இரண்டு பிரிவாக ஊர்வல கமாக வந்து காங்கேயம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு இந்த காத்தி ருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது &nbsp;700க்கு மேற்பட்ட பெண்கள் பங் கேற்று முழக்கங்கள் எழுப்பி பட்டா &nbsp;வழங்க வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.