தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீண்டாமை கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி காங்கேயத்தில் போராட்டம்

27 Jan 2026, 3:28 pm
தீண்டாமை கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி காங்கேயத்தில் போராட்டம்
<p><strong>தீண்டாமை கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி காங்கேயத்தில் போராட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன. 27 &ndash; திருப்பூர் மாவட்டம் காங் கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்யும் &nbsp;ஆசிரியர்கள் மீது தீண் டாமை பாகுபாட்டைக் காட் டக்கூடிய பள்ளித் தலைமை &nbsp;ஆசிரியர் மற்றும் இரு ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை &nbsp;எடுக்கக் கோரி தீண்டாமை &nbsp;ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. காங்கேயம் பேருந்து நிலையத்தில் செவ்வாயன்று இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டப் பொருளாளர் எஸ்.சண்மு கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரு &nbsp;ஆசிரியர்கள் அங்கு வேலை செய்யும் பட்டி யல் சமூக ஆசிரியர்கள் மீது சாதிய தீண் டாமை பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்ற னர். அவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுவது, செயல்படுவது என தலைமை ஆசி ரியர் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக &nbsp;நடந்து கொள்கிறார். எனவே தீண்டாமை யைக் கடைப்பிடிக்கும் தலைமை ஆசிரி யர் மற்றும் இரு ஆசிரியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி &nbsp;திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.பரமசி வம் துவக்கி வைத்துப் பேசினார். ஆதித்தமி ழர் சனநாயக பேரவை நிறுவனத் தலைவர் &nbsp;அ.சு.பவுத்தன் பேசினர். இப்போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங் கேயம் தாலுகா (பொறுப்பு) செயலாளர் இரா. செல்வராஜ் பேசினார். &nbsp;தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலா ளர் ச.நந்தகோபால், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் கு.பாலமுர ளி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சாவித்திரி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் செல்லமுத்து, முருகசாமி, அர்ஜு னன் மற்றும் விவசாயத்தொழிலாளர் சங்கம், &nbsp;ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய நிர்வாகிகள் உள்பட 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.