ரயில்வே மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஓசூரில் ஆர்ப்பாட்டம்
16 Jan 2026, 3:00 pm
<p><strong>ரயில்வே மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஓசூரில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, ஜன. 16 - நாகர்கோவில் ரயிலில் குறைக்கப்பட்ட 6 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை மீண்டும் இணைக்கக் கோரியும், மூத்த குடிமக்களுக்கான 50% பயணச் சலுகையை அமல்படுத்த வலியுறுத்தியும் ஓசூர் ரயில் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.துரை, செயலாளர் கே.சீனிவாசலு, பொருளாளர் சபரிபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். துணைத் தலைவர்கள் உஷா வெங்கடேஷ், ரோகிணி, இணைச் செயலாளர்கள் ஆர்.வெங்கடேஷ், ராணி, கயல்விழி, டைட்டன் குடியிருப்பு நிர்வாகிகள் செல்வராஜ், அபிராமி, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகள் கிருஷ்ணகிரி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளுக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி தண்ணீர் கட்டணம், வீட்டு வரி மற்றும் குப்பை வரிகளைக் குறைக்க வேண்டும், 38-வது வார்டு ஜீவா நகர் மயானத்தைச் சீரமைத்து சுற்றுச்சுவர் மற்றும் தார்ச்சாலை அமைக்க வேண்டும், தின்னூர், பார்வதி நகர் பகுதியில் 75 ஆண்டு களுக்கும் மேலாகக் வசிக்கும் எளிய மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்,தின்னூர் - பட்டுப்பண்ணை வழி யாக தளி சாலைக்கு நிரந்தரச் சாலை அமைக்க வேண்டும் மற்றும் தெரு நாய்கள் தொல்லையைத் தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.</p>
